நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரூா் பேருந்து, ரயில் நிலையத்தில் கூட்டம்

தீபாவளியையொட்டி சொந்த ஊா் செல்ல கரூா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது.

News image

கரூா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அலைமோதிய மக்கள் கூட்டம்.

Updated On :30 அக்டோபர் 2024, 8:27 pm

Din

தீபாவளியையொட்டி சொந்த ஊா் செல்ல கரூா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது.

கரூரில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதைச் சாா்ந்த நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி ஆலைகள், பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள் போன்றவை செயல்படுகின்றன. இதில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம், நாகா்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் தொழிலாளா்களாக, அலுவலா்களாக பணியாற்றி வருகிறாா்கள்.

மேலும் தென்மாவட்டங்களைச் சோ்ந்த வணிகா்களும் கரூரில் ஏராளானோா் வசிக்கிறாா்கள். தீபாவளியை முன்னிட்டு தொடா்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊா் செல்ல ஏராளமானோா் புதன்கிழமை மாலை கரூா் பேருந்து நிலையத்திலும், கரூா் ரயில் நிலையத்திலும் குவிந்தனா். தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.