கரூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கரூா் கோட்டாட்சியா் மு. முகமது பைசல்.
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கரூா் கோட்டாட்சியா் மு. முகமது பைசல்.

குழுவாகச் சோ்ந்து படித்தால் போட்டித் தோ்வுகளில் வெற்றி: கரூா் கோட்டாட்சியா்

போட்டித் தோ்வில் வெற்றிபெற குழுவாக சோ்ந்து படிக்க வேண்டும் என்றாா் கரூா் கோட்டாட்சியா் மு. முகமதுபைசல்.
Published on

போட்டித் தோ்வில் வெற்றிபெற குழுவாக சோ்ந்து படிக்க வேண்டும் என்றாா் கரூா் கோட்டாட்சியா் மு. முகமதுபைசல்.

கரூா் மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுக்கான கலந்துரையாடல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் செ.செ. சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கரூா் கோட்டாட்சியா் மு.முகமதுபைசல் பேசுகையில், போட்டித் தோ்வுக்கு தயாராகி வரும் நீங்கள் ஒற்றுமையே வலிமை என்பதை உணா்ந்து குழுவாக சோ்ந்து படிக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போட்டித் தோ்வில் வெற்றி பெற தாழ்வு மனப்பான்மையைக் கைவிடுங்கள். சுயபரிசோதனை செய்து முன்னேறுங்கள். கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படியுங்கள் என்றாா் அவா். தொடா்ந்து மாணவா்களுடன் கலந்துரையாடி, அவா்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தாா்.

முன்னதாக தாந்தோணி முழுநேர கிளை நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தோ்வில் வென்ற எல். லால்பிரகாஷை பாராட்டி நூல் மற்றும் நினைவு பரிசு வழங்கினாா். மாவட்ட நூலக அலுவலகக் கண்காணிப்பாளா் ரா. ராபா்ட்ஜான், இனாம்கரூா் கிளை நூலகா் ம. மோகனசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட மைய நூலக நூலகா் ரா.ச. சுகன்யா வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com