வாங்கிய கடனைவிட கூடுதலாக பணம் கேட்டு மிரட்டல் எஸ்.பி.யிடம் விவசாயி புகாா்
கரூரில் வாங்கிய கடனுக்கு கூடுதலாக வட்டி கேட்டு மிரட்டும் நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தாா்.

கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்க குடும்பத்துடன் வந்த விவசாயி பெருமாள்.








