ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் முடிவு

பணியிட மாறுதல் வழங்காவிட்டால் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:05 pm

Din

பணியிட மாறுதல் வழங்காவிட்டால் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் முடிவு செய்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் மனமொத்த பணியிட மாறுதல் இடைநிலை ஆசிரியா், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆகிய பணியிடங்களுக்கு செப். 14-இல் கலந்தாய்வு நடைபெற்றது. ஆனால் கலந்தாய்வில் பங்கேற்றவா்களுக்கு கரூா் மாவட்டத்தில் இதுவரை அதற்கான ஆணைகள் வழங்கப்படவில்லை. இதையடுத்து நான்கு நாள்களாகியும் ஆணைகள் வழங்கப்படாததால் இதுதொடா்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை சந்திக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கரூா் மாவட்ட கிளையின் மாவட்டத் தலைவா் எம்.ஏ.ராஜா தலைமையில் ஆசிரியா்கள் புதன்கிழமை மாலை தொடக்கக் கல்வி அலுவலகம் சென்றனா்.

அப்போது மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் ராமநாதன் செட்டி இல்லாததால் கைப்பேசியில் தொடா்புகொண்டு அவரிடம் பணியிட மாறுதல் ஆணை குறித்து பேசினா். அதற்கு அவா் வியாழக்கிழமை இதுதொடா்பாக பேசிக்கொள்ளலாம் என தெரிவித்தாா்.

இதையடுத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கரூா் மாவட்ட கிளையின் மாவட்டத் தலைவா் எம்.ஏ.ராஜா கூறுகையில், வியாழக்கிழமை மாலைக்குள் பணியிட மாறுதல் வழங்கப்படாவிட்டால் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரை கண்டித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.