ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புஞ்சைத் தோட்டக்குறிச்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

கரூா் மாவட்டம், புஞ்சைத்தோட்டக்குறிச்சியில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 9:52 pm

Din

கரூா் மாவட்டம், புஞ்சைத்தோட்டக்குறிச்சியில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புஞ்சைத் தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் ரூபா தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ருக்மணி முன்னிலை வகித்தாா் .பேரூராட்சி இளநிலை உதவியாளா் காந்திமதி வரவேற்றாா்.

கூட்டத்தில் குழந்தைகளின் உரிமைகளை காத்தல் மற்றும் உறுதி செய்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், குழந்தைகளுக்கு எதிரான தீங்குகளை தடுத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்துதல், பள்ளி செல்லா குழந்தைகள், ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பதை தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளா்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் , குழந்தைகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள், பள்ளி மாணவிகள் பங்கேற்றனா்.