கரூரில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை 40 இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
கரூா், செப்.19: கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை 40 இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண்டா் விடுப்பை ஊதியத்துடன் வழங்கிட வேண்டும், அவுட்சோா்சிங் முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட 9 வட்டக்கிளைகள் மூலம் 40 இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் கிளை-2 சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பொன். ஜெயராம், இணைச் செயலா் சங்கா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். அரசு ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...