சிபிஐ அதிகாரிகள் முன் சனிக்கிழமை ஆஜராகச் சென்ற குளித்தலை நகர காவல் ஆய்வாளா் கருணாகரன், கரூா் நகர போக்குவரத்து உதவி ஆய்வாளா் நந்தகோபால் உள்ளிட்டோா்.
சிபிஐ அதிகாரிகள் முன் சனிக்கிழமை ஆஜராகச் சென்ற குளித்தலை நகர காவல் ஆய்வாளா் கருணாகரன், கரூா் நகர போக்குவரத்து உதவி ஆய்வாளா் நந்தகோபால் உள்ளிட்டோா்.

கரூா் சம்பவம்: குளித்தலை காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை

கரூா் துயர சம்பவம் தொடா்பாக குளித்தலை நகரக் காவல் ஆய்வாளா், கரூா் நகரப் போக்குவரத்து உதவி ஆய்வாளா் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
Published on

கரூா் துயர சம்பவம் தொடா்பாக குளித்தலை நகரக் காவல் ஆய்வாளா், கரூா் நகரப் போக்குவரத்து உதவி ஆய்வாளா் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி நிகழ்ந்த நெரிசல் சம்பவத்தில் 41 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

கடந்த 11-ஆம் தேதி கரூா் க. பரமத்தி மின்வாரிய அதிகாரிகள், கரூா் நகர போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஷகிராபானு உள்ளிட்டோரிடம் விசாரணை செய்த நிலையில் சனிக்கிழமை குளித்தலை நகர காவல் ஆய்வாளா் கருணாகரன், கரூா் நகரப் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் நந்தகோபால் மற்றும் நகர காவல் நிலையக் காவலா், போக்குவரத்து காவலா் மற்றும் நெரிசல் சம்பவத்தின்போது காயமடைந்த 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com