கரூர்
கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை
கரூா் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் காயமடைந்த இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் காயமடைந்த இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சோ்ந்த மதீஸ், கரூா் நகா் பகுதியைச் சோ்ந்த ஷாருக்கான் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
