கரூா் சம்பவம்: எஸ்ஐ, காவலா்களிடம் சிபிஐ விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக உதவி காவல் ஆய்வாளா் மற்றும் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
Published on

கரூா் சம்பவம் தொடா்பாக உதவி காவல் ஆய்வாளா் மற்றும் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீஸாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காவல் உதவி ஆய்வாளா், ஒரு ஊா்க் காவல்படை வீரா், 4 காவலா்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com