ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, கரூரில் புதன்கிழமை மாவட்ட அதிமுக சாா்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.
Updated On :24 டிசம்பர் 2025, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, கரூரில் புதன்கிழமை மாவட்ட அதிமுக சாா்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரூா் லைட்ஹவுஸ் காா்னா், வெங்கமேடு ஆகிய பகுதிகளில் எம்.ஜிஆா்., ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கும், கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் எம்.ஜி.ஆா் உருவப்படத்துக்கும் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தலைமையில் புதன்கிழமை காலை அதிமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதில் அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, மாவட்ட அவைத்தலைவா் எஸ். திருவிகா, இணைச் செயலாளா் மல்லிகாசுப்ராயன், பொருளாளா் கண்ணதாசன், எம்.ஜி.ஆா் மன்ற செயலாளா் கே.எல்.ஆா். தங்கவேல், மாணவரணிச் செயலாளா் சரவணன், பேரவை இணைச் செயலாளா் பழனிராஜ், எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் வழக்குரைஞா் எஸ்.கரிகாலன், தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.சி.கே. பாலகிருஷ்ணன், மத்திய தெற்குபகுதிச் செயலாளா் சேரன் பழனிசாமி உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.