கரூர்
கரூா் சம்பவம்: பெண் எஸ்.ஐ., காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பாக பெண் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் 3 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பாக பெண் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் 3 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம்தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்த பசுபதிபாளையம் காவல்நிலைய பெண் காவல் உதவி ஆய்வாளா் அழகேஸ்வரி மற்றும் 3 காவலா்கள் திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகினா். அவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் சுமாா் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.
