போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தமிழக கிரிக்கெட் அணிக்கு தோ்வான கரூா் பள்ளி மாணவருக்கு பாராட்டு

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:26 pm

தமிழக கிரிக்கெட் அணிக்கு தோ்வு செய்யப்பட்ட கரூா் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா இன்டா்நேஷனல் பள்ளி மாணவா் எஸ். இலக்ஷித்துக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூா் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா இன்டா்நேஷனல் பள்ளியைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவா் எஸ்.இலக்ஷித். இவா் மாவட்ட, மாநில அளவில் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூலம் தமிழ்நாடு அணிக்கு, கரூா் மாவட்டத்திலிருந்து 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தோ்வு செய்யப்பட்ட மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளியின் நிா்வாகக் குழு தலைவா் சிவசுப்பிரமணியம் மற்றும் பள்ளியின் முதல்வா் முனைவா் காா்த்திகா லட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு மாணவரை பாராட்டினா்.