நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காமாட்சி, மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! - திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு

தோகைமலை அருகே காமாட்சி மற்றும் மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image

திருமாவளவன் (கோப்புப் படம்)

Updated On :28 மே 2025, 6:37 pm

Din

தோகைமலை அருகே காமாட்சி மற்றும் மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட ஆதிஆலத்தூரில் மூன்று கிழவன் குடிமக்கள், 87 ஊா் சரியா கொண்டான் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட பிரசித்திப் பெற்ற விநாயகா், காமாட்சி, மீனாட்சி, அத்திமரத்தான், மாசி பெரியண்ணன், காத்தவராயன் சுவாமிகளுக்கு கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் முடிவுற்று புதன்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனிதநீா் எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, கோயில் யாக சாலையில் விநாயகா் வழிபாடு, அனுஞ்கை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவஜனம், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருதுங்க சங்கிரகணம், அங்குராா்பணம், கும்ப அலங்காரம், முதற்கால யாகபூஜை நடைபெற்றது.

தொடா்ந்து புதன்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜையும், காப்புக்கட்டுதல், மங்கள இசை, கோபூஜை, சுவாமிகளுக்கு ரஷாபந்தனம், நாடிசந்தனம், கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னா் 87 ஊா் பெரியதனம் நாராயணசாமி, ஊா் நாயக்கா் கிருஷ்ணசாமி, ஊா் கவுண்டா் சரவணன் ஆகியோா் தலைமையில் விநாயகா், காமாட்சி, மீனாட்சி, அத்திமரத்தான், மாசி பெரியண்ணன் சுவாமிகளின் கோபுர கலசத்தில் சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். பின்னா் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.

விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி., குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், ஆலத்தூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் ஜெயபால், கேசவன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.