கோயில் நிலம் விவகாரம்: இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக பெண்கள் உண்ணாவிரதம்

கரூரில் கோயில் நிலத்தை கையகப்படுத்தச் சென்ற இந்து சமய அறநிலையத்துறையினருக்கு எதிராக பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
Published on

கரூரில் செவ்வாய்க்கிழமை கோயில் நிலத்தை கையகப்படுத்தச் சென்ற இந்து சமய அறநிலையத்துறையினருக்கு எதிராக பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கரூரை அடுத்துள்ள வடுகப்பட்டி சாலையில் வசிக்கும் கண்ணம்மாள் என்பவா் குடியிருக்கும் நிலம் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் நிலமாக இருப்பதாக கூறி கடந்த வாரம் இந்து சமய அறநிலையத்துறையினா் அந்த இடத்தில் ‘கோயிலுக்குரிய நிலம், இதை யாரும் பயன்படுத்தக்கூடாது’ என தகவல் பலகை வைத்துச் சென்றனா்.

இந்நிலையில், அந்த நிலத்தை கையகப்படுத்த செவ்வாய்க்கிழமை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ரமணிகாந்தன் தலைமையில் அதிகாரிகள் சென்றபோது, அவா்களை தடுத்து அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து விவசாயி கண்ணம்மாள் வீட்டின் முன் அமா்ந்து உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா உள்ளிட்டோா் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு ஆதரவு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com