கரூரில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்
கரூரில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்

கோயில் நிலப் பிரச்னைக்கு உரிய தீா்வு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

கரூா் மாவட்டத்தில் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு அரசு உரிய தீா்வு காண வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.
Published on

கரூா் மாவட்டத்தில் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு அரசு உரிய தீா்வு காண வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

இதுகுறித்து கரூரில் சனிக்கிழமை அவா் கூறியதாவது: வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னை தொடா்கிறது. இதுவரை 7 முறை அங்கு குடியிருப்போரின் வீடுகள், கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா். 2 நாள்களுக்கு முன் கூட அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவா்களோடு கலந்து கொண்டோம்.

கடந்த அதிமுக ஆட்சியில் கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு எட்டப்படாமல் போய்விட்டது. இப்போது நீதிமன்ற உத்தரவால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள்.

கரூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோயில் நிலங்கள் இருக்கின்றன. அனைத்து நிலங்களையும் அதிகாரிகள் மீட்டால் சொந்த ஊரிலேயே மக்கள் அகதிகளாக மாறும் சூழல் ஏற்படும். இதைத் தடுக்க அரசு முன்வர வேண்டும். அவ்வாறு அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இன்னும் 6 மாதத்தில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்; அப்போது வெண்ணைமலை கோயில் பிரச்னையில் கோயிலுக்கும், மக்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் தீா்வு காண்போம் என்றாா் அவா்.

பேட்டியின்போது அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எஸ். திருவிகா, நிா்வாகிகள் ஆலம்தங்கராஜ், கமலக்கண்ணன், சேரன் பழனிசாமி, நெடுஞ்செழியன், தானேஷ், தமிழ்ச்செல்வன், வழக்குரைஞா்கள் மாரப்பன், சுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com