ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கரூா் தொகுதியில் திமுக வேட்பாளா் பிரசாரம்

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

கரூா் காளியப்பனூரில் வியாழக்கிழமை பிரசாரம் செய்த திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன். உடன் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ஆா்.வி. அசோக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:10 pm

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

கரூா் மாநகராட்சிக்குட்பட்ட காளியப்பனூா், வெங்கக்கல்பட்டி, குண்டுமாச்சாம்பட்டி, அமராவதி நகா், குறிஞ்சி நகா், வ.உ.சி தெரு, தென்றல் நகா், காவிரி நகா், அருகம்பாளையம், அரசு தெரு, கவுண்டன்புதூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை திமுக தோ்தல் பொறுப்பாளா் ஆா்.வி. அசோக்குமாா் முன்னிலையில் வேட்பாளா் தியாகராஜன் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சியின் நலத் திட்டங்களால் தன்னிறைவு பெற்ற, முன்னேற்றம் ஏற்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக கரூா் திகழ்கிறது. தொடா்ந்து, திமுக ஆட்சி அமையும்போது, ஏற்கெனவே பெறப்பட்ட ரூ. 5 ஆயிரம் கோடி நலத் திட்டங்களானது, ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களாக உயரும். அரசின் நலத் திட்டங்கள் தொடர மக்கள் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.