தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றிவாகை சூடும் என்றாா் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் தலைவா் ஜான்பாண்டியன்.
கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருக்காம்புலியூா், பெரிய ஆண்டாங்கோவில், திருமாநிலையூா், தாந்தோணி, காந்திகிராமம், பாலம்மாள்புரம், நீலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கரூா் சட்டப்பேரவைத்தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக ஜான்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசுகையில், இந்தத் தோ்தலில் நமக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி. ஆனால் முதல்வா் ஸ்டாலின் மத்திய அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும்தான் போட்டி என்கிறாா். மத்திய அரசை ஆண்டுகொண்டிருப்பவா் பிரதமா் மோடி. தமிழ்நாட்டை ஆளப்போவது எடப்பாடி பழனிசாமி. இதைவிட்டுவிட்டு தெருத்தெருவாக புலம்ப ஆரம்பித்துவிட்டனா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் வெற்றிவாகை சூடும். எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக முதல்வராவாா். நம் வேட்பாளா் நிச்சயம் அமைச்சாராவாா். இதுவரை 5 ஆண்டுகாலம் பட்ட துன்பம் போதும்.
திமுகவினா் டெபாசிட்கூட வாங்க முடியாத வகையில் உங்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என்றாா் அவா். பிரசாரத்தின்போது வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா், முன்னாள் எம்எல்ஏ செ. காமராஜ், தொழிற்சங்கச் செயலா் ஆட்டோ ரங்கராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்

திமுகவுக்கு தோல்வி பயம்: ஜான் பாண்டியன் விமா்சனம்

புதுவையில் தே.ஜ.கூ. வெற்றியை பிரதமருக்கு சமா்ப்பிப்போம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மனு தாக்கல்
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி



