19 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை மின்வாரியத்தில் ரூ. 2,000 கோடி டெண்டா்கள் நிறுத்திவைப்பு!அமெரிக்காவின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு ஜனநாயக கட்சியினா் எதிா்ப்பு ஈரான் போா் நெருக்கடி: மகன் திருமண விழாவைத் தவிா்க்கும் டிரம்ப்!போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!
/

கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மனு தாக்கல்

News image

கரூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சு.சத்திய பால கங்காதரனிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். உடன் முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி, பாஜக மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோா்.

Updated On :30 மார்ச் 2026, 11:57 pm IST

கரூா் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக கட்சி அலுவலகத்தில் இருந்து மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா மற்றும் பாஜக மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன், பாமக மாவட்டச் செயலாளா் புகழூா் சுரேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளும், கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளா் மருத்துவா் திவ்யா, குளித்தலை வேட்பாளா் கருணாகரன், அரவக்குறிச்சி வேட்பாளா் எம்.ஆா்.கே செல்வகுமாா் உள்ளிட்டோா் ஊா்வலமாக புறப்பட்டனா்.

பிற்பகல் 12.48 மணிக்கு கரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சு. சத்திய பால கங்காதரனிடம் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அவருக்கு மாற்று வேட்பாளராக உறவினா் கவின் மனு தாக்கல் செய்தாா். வேட்புமனு தாக்கலின்போது முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சொத்து மதிப்பு விவரம்: வேட்பு மனுவில், எம்.ஆா்.விஜயபாஸ்கா் பெயரில் அசையும் சொத்து- ரூ.4, 33, 90,321, அசையா சொத்து ரூ. 1,40,74,853 உள்ளதாகவும், மனைவி விஜயலட்சுமி பெயரில் அசையும் சொத்து ரூ.5, 39, 22, 047, அசையா சொத்தாக ரூ.2, 12, 34, 072 உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.