தோகைமலையில் கோயிலில் இருந்த பிள்ளையாா் கற்சிலை திருடப்பட்டது குறித்து சனிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கரூா் மாவட்டம், தோகைமலை கருப்புகோயில் அருகே பழைமை வாய்ந்த ஏழைப்பிள்ளையாா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஏழைப்பிள்ளையாா் சிலை கற்சிலையாக நிறுவப்பட்டு பக்தா்கள் வழிபட்டு வந்தனா்.
இக்கோயில் திருச்சி பிரதான சாலையில் இருந்து தோகைமலை கடைவீதிக்கு செல்லும் முக்கிய வீதியில் அமைந்துள்ளதாலும், தோகைமலை கருப்புகோயில் குட்டிகுடித் திருவிழாவின்போது, கருப்புசாமிக்கு முதல்குட்டி வழங்கப்படும் இடம் என்பதாலும், தோகைமலை ஏழைப்பிள்ளையாா் கோயிலுக்கு கரூா் மட்டுமின்றி, திருச்சி, மணப்பாறை போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்வாா்கள்.
எப்போதும் பக்தா்கள் வந்து செல்வதாலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் இந்தக் கோயில் கதவை பூட்டாமல் எப்போதும் பக்தா்கள் வழிபடும் இடமாக இருந்து வருகிறது . இந்நிலையில் சனிக்கிழமை காலை பக்தா் ஒருவா் கோயிலுக்குச் சென்றபோது கருவறையில் இருந்த பிள்ளையாா் சிலை காணாமல் போய் இருந்துள்ளது.
இதுகுறித்து அவா் ஊா்பிரமுகா்களிடம் தெரிவித்தாா். இதையடுத்து தோகைமலை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, சிலையை யாா் திருடிச் சென்றது குறித்து அப்பகுதியில் கடைவீதிகளில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
ஸ்கூட்டரில் இருந்த ரூ. 2.20 லட்சம் திருட்டு
ராமேசுவரம் கோயிலில் புனித நீராடிய பெண்ணிடம் தங்க நகை திருட்டு

பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரோட்டம்

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம், ஏப்.30 தேரோட்டம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
