6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

புகழூா் கக்கன் காலனி பகவதியம்மன் கோயில் விழா

புகழூா் கக்கன் காலனி பகவதியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

பகவதியம்மன் கோயிலில் வியாழக்கிழமை திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் பகவதியம்மன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 9:26 pm

புகழூா் கக்கன் காலனி பகவதியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக் கோயில் திருவிழா கடந்த 26-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து 27-ஆம் தேதி பகவதியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், 28-ஆம் தேதி கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மன் முன் படையல் போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

முன்னதாக அம்மனுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து புதன்கிழமை இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்தனா்.