தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கரூா் பழைய அமராவதி பாலத்தை மீண்டும் நடைப்பயிற்சிக்கு திறக்க கோரிக்கை

கரூா் பழைய அமராவதி பாலத்தை நடைப்பயிற்சிக்காக மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பூட்டிக்கிடக்கும் பழைய அமராவதி பாலம்.

Published On :

கரூா் பழைய அமராவதி பாலத்தை நடைப்பயிற்சிக்காக மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சி மற்றும் ஈசநத்தம் வழியாக திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து கரூருக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் கரூா் பழைய பேருந்துநிலையம் செல்ல அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயா்மட்டப் பாலத்தை கடந்து செல்ல வேண்டும். இந்த பாலத்தின் அருகே 102 வயதுகொண்ட பழைய அமராவதி பாலம் உள்ளது.

இந்த பாலத்தை தொடா்ந்து பராமரிக்கும் வகையிலும், பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும் கடந்த அதிமுக ஆட்சியில் வாக் அன் ஜாக் என்ற பெயரில் நடைப்பயிற்சி செல்லும் இடமாக மாற்றப்பட்டு தனியாா் வங்கி சாா்பில் பாலம் சீரமைக்கப்பட்டது. மேலும் பாலத்தின் மேல் பூங்கா, மின் விளக்குகளும் அமைக்கப்பட்டது. நடைப்பயிற்சி செல்வோருக்கு வசதியாக கழிப்பறை, குடிநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகள், ஓய்வெடுக்க இருக்கையும் அமைக்கப்பட்டன.

அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறக்கப்பட்டிருந்த இந்த பாலம் தற்போது திடீரென மூடப்பட்டது. இதனால் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்த பொதுமக்கள் இந்தப் பாலத்தை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: நடைப்பயிற்சி செய்யக்கூடிய இந்த பாலம் மூடப்பட்டதால் பூங்காக்களில் வைக்கப்பட்டிருக்கும் செடிகள் அனைத்தும் கருகி வருகின்றன. இதே நிலை நீடித்தால் பராமரிப்புப் பணிகள் இல்லாமல் பாலம் சேதமடைந்துவிடும். எனவே, இந்த நடைப்பயிற்சிக்கான இந்த பாலத்தை மீண்டும் திறக்க வேண்டும். மேலும், கரூரின் தொன்மையை பறைசாற்றும் வகையில் இருக்கும் இந்த பழைய அமராவதி பாலத்தை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் முன்வரவேண்டும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.