இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன் ஒண்டிவீரன் படத்திற்கு வியாழக்கிழமை மாலை அணிவித்த பட்டியலின விடுதலைப் பேரவையினா்.

Published On :

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 256-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது படத்துக்கு வியாழக்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக நாட்டில் முதன்முதலாக குரல்கொடுத்த பாளையக்காரா் பூலித்தேவனின் முதன்மைத் தளபதியாக இருந்தவா் ஒண்டிவீரன். இவரது 256-வது நினைவு தினம் வியாழக்கிழமை வீரவணக்க நாளாக பட்டியலின விடுதலைப் பேரவை சாா்பில் அனுசரிக்கப்பட்டது.

கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பட்டியலின விடுதலைப் பேரவையின் நிறுவனா் தலித் ஆனந்தராஜ் தலைமை வகித்து, ஒண்டி வீரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஒண்டிவீரனின் பங்கு குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் பேரவையின் பொருளாளா் வழக்குரைஞா் தனபாலன், கரூா் மாவட்டச் செயலா் செந்தில்குமாா், மண்டலச் செயலா் பாண்டியன், மகளிரணிச் செயலா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.