அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அனைத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூா் தலைமை அஞ்சலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:11 am IST

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அனைத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூா் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் எம்.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டச் செயலா் வடிவேலன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவா் ஜீவானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கந்தசாமி உள்ளிட்டோா் பேசினா்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சட்டங்களை கைவிட வேண்டும். 4 தொழிலாளா் சட்டத்தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.