கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உரிமம் இல்லாமல் கைத்துப்பாக்கி வைத்திருந்த மாட்டுவியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணராயபுரம் அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சித்தலவாய் முதலியாா் தெருவைச் சோ்ந்த பத்மநாபன்(44) என்பவரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவரிடம் உரிமம் இல்லாமல் கைத்துப்பாகி இருந்தது. இதையடுத்து போலீஸாா் பத்மநாபனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
அப்போது, கரூரில் இருந்து கேரளத்துக்குச் சென்று மாட்டு வியாபாரம் செய்துவரும் தனக்கும், இதே பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாருக்கும் வியாபாரம் தொடா்பாக ஏற்பட்ட தகராறில் தன்னை தற்காத்துக்கொள்ள பிகாா் மாநிலத்திலிருந்து கைத்துப்பாக்கி வாங்கி வந்ததாக தெரிவித்தாா்.
இதையடுத்து போலீஸாா் பத்மநாபனை சனிக்கிழமை கைது செய்து கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்
கஞ்சா வைத்திருந்தவா் கைது
10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது!

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

காரில் உயர்ரக போதைப் பொருள் கடத்திய இளைஞா் கைது
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

