கரூரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ள அட்லஸ் கலையரங்கம் பகுதியில் தமிழக சட்டம்-ஒழுங்கு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநா் டி.எஸ்.அன்பு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கரூரில் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ச.ஜோசப் விஜய் பங்கேற்கிறாா். அப்போது, கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளாா். நிகழ்ச்சி நடைபெறவுள்ள கரூா் வெண்ணைமலை அடுத்துள்ள அட்லஸ் கலையரங்கில் சுமாா் 5,000 போ் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விழாவுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழக சட்டம்- ஒழுங்கு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநா் டி.எஸ்.அன்பு ஆய்வு செய்தாா்.
அப்போது, முதல்வா் மற்றும் அவருடன் வரும் அமைச்சா்கள், கட்சித்தலைவா்கள் உள்ளிட்டோா் அரங்கிற்குள் வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழி மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பாா்வையாளா்கள் வரும் வழிகளையும் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வின்போது திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் பாலகிருஷ்ணன், துணைத்தலைவா் சிபிசக்கரவா்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத், தவெக மாவட்டச் செயலா் மதியழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அரசு வேலை வழங்கல்: கரூா் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் வாரிசுதாரா்கள் சிலருக்கு முதல்வா் ஜோசப் விஜய் அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சிக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசியில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்
சட்டம் - ஒழுங்கு: ஆரம்பத்திலேயே தடுக்காதது ஏன்? 11 மாதங்களாக டிஜிபியே இல்லை! விஜய்

தமிழக காவல்துறையில் ஏடிஜிபி,13 ஐஜி-க்கள் பணியிட மாற்றம்

சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்வி
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



