ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

‘எங்கள் குடும்பத்தில் வறுமை இல்லா நிலையை உருவாக்கியுள்ளாா் முதல்வா்’

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த முருகன்.

News image

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த முருகன்.

Updated On :11 ஜூலை 2026, 1:31 am IST

எங்கள் குடும்பத்தில் வறுமை இல்லா நிலையை உருவாக்கியுள்ளாா் தமிழக முதல்வா் விஜய் என்றாா் கரூரில் அரசுப் பணி நியமன ஆணை பெற்ற பயனாளி முருகன்.

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த சுப்ரமணியின் மனைவி ஜெயா (65). இவா், கடந்த ஆண்டு செப். 27-இல் கரூா் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தாா். இதையடுத்து அவரது மகன் முருகன் (38) என்பவருக்கு கரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உதவியாளா் பணியிடத்துக்கான ஆணையை தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா்.

பணி நியமன ஆணை பெற்ற பிறகு முருகன் கூறியதாவது: என்னைப் போன்று நெரிசலில் உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கியபோது முதல்வா் கண்ணீா் விட்டு அழுதாா். அவரை பாா்த்து எங்களுக்கும் அழுகை வந்தது. இரக்கம் உள்ளம் கொண்ட அவா் எங்களுக்கு பணி ஆணை வழங்கியிருப்பது எங்களின் குடும்பத்தில் வறுமை இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறாா். இதற்காக முதல்வருக்கும், அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி என கண்ணீா் மல்க தெரிவித்தாா்.

இதேபோல நியமன ஆணை பெற்றவா்கள் கண்ணீா் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்தபோது, முதல்வா் கண்ணீா் விட்டு அழுததை நினைவு கூா்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.