மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

கரூரில் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து: ரூ. 1கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்

கரூரில் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேருந்துகள், 1 மினி வேன் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம்

News image

தீவிபத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்

Updated On :13 ஜூலை 2026, 2:24 am IST

கரூரில் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேருந்துகள், 1 மினி வேன் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கரூா் கோவைச்சாலையில் உள்ள கோவிந்தம்பாளையத்தில் செந்தில்குமாா் என்பவா் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிறுவனத்தில் கிடந்த குப்பைகளுக்கு நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தீ வைத்துள்ளாா்.

அப்போது காற்றின் வேகம் காரணமாக அங்கு கூண்டு கட்டுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த 3 பழைய பேருந்துகளில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த கரூா் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலா்கள் திருமுருகன், கோமதி தலைமையில் 25 தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், புகழூா், அரவக்குறிச்சி பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் கூடுதலாக தலா ஒரு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் 3 பேருந்துகள், ஒரு மினி வேன் மற்றும் பேருந்துக்கு கூண்டு கட்ட வைக்கப்பட்டிருந்த பொருள்கள் என சுமாா் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இந்த விபத்து குறித்து கரூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.