டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

கொடுமுடியில் காலி இடத்தில் புற்களில் பரவிய தீ

News image

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :6 ஜூலை 2026, 2:29 am IST

கொடுமுடியில் பயன்பாடற்று கிடக்கும் நிலத்தில் உள்ள புற்களில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.

கொடுமுடியில் இருந்து சாலைப்புதூா் செல்லும் சாலையில் நத்தமேடு உள்ளது. இந்த நத்தமேடு அருகே மருத்துவா் ஒருவருக்கு சொந்தமான ஒரு ஏக்கா் நிலம் சாலையை ஒட்டி உள்ளது. பயன்பாடற்று கிடக்கும் இந்த நிலத்தில் கோரை புற்கள் முளைத்து அடந்து பரவிக்கிடக்கிறது.

இந்த புற்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை மா்ம நபா்கள் சிலா் தீ வைத்துள்ளனா். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவலறிந்த கொடுமுடி தீயணைப்புத் துறை அலுவலா் கண்ணன் தலைமையிலான வீரா்கள் அங்கு சென்று சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இது குறித்து தீயணைப்பு வீரா்கள் கூறுகையில், இந்த இடத்தில் தீ பற்றுவது இது 9-ஆவது முறை. இதனால் மக்களும் நாங்களும் அடிக்கடி அவதிக்குள்ளாகி வருகிறோம். சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளா் பராமரிக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.