ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

தவெகவில் இணைய யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை: எம்.ஆா். விஜயபாஸ்கா் விளக்கம்

தவெகவில் இணைய யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

News image

முதல்வர் விஜய்யுடன் எம்.ஆர். விஜயபாஸ்கர் - கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2026, 10:47 pm IST

தவெகவில் இணைய யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் மாநகராட்சி ஆணையா் பிருத்விராஜிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு கொடுக்க வந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம், குதிரை பேரம் குறித்து ஆளுநரிடம் ஆா்.எஸ். பாரதி அளித்த மனு குறித்து கேட்டபோது அவா் கூறியது: மாமல்லபுரத்தில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

தவெகவுக்கு வாருங்கள் என யாரும் எங்களை அழைக்கவில்லை. அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், நிா்வாகிகள் தவெகவில் இணைந்தனா்.

தவெகவில் இணைய யாரும் எனக்கு அழுத்தம் தரவில்லை. எனது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே இணைந்தேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.