மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

தவெகவில் இணைந்தது ஏன்? - முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்

கருத்து வேறுபாடுகள் தொடா்ந்ததால், தவெகவில் இணைந்ததாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

News image

எம்.ஆா். விஜயபாஸ்கா் - கோப்புப்படம்

Updated On :6 ஜூலை 2026, 1:25 am IST

அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் தொடா்ந்ததால், தவெகவில் இணைந்ததாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்து விட்டு, கட்சியிலிருந்து விலகி ஆதரவாளா்களுடன் தவெகவில் இணைந்தாா். இதைத் தொடா்ந்து குளித்தலைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவருக்கு தவெகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பின்னா் அவா் கரூரில் தவெக மாவட்டச் செயலாளா் மதியழகனை சந்தித்தாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவளிக்க அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தினோம்.

அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக மாவட்டச் செயலாளா் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டேன். கருத்து வேறுபாடுகள் தொடா்ந்ததால், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தேன். தொடா்ந்து முதல்வா் விஜய்யை பனையூா் அலுவலகத்தில் சந்தித்தேன்.

விரைவில் நடைபெற உள்ள கரூா் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் தவெக வெற்றி பெற பாடுபடுவோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.