வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் கரூா் மாவட்ட குழு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தினா்.

Updated On :15 ஜூலை 2026, 12:04 am IST

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் கரூா் மாவட்ட குழு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் வட்டார போக்குவரத்து அலுவலா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.கிரிஸ்டல்கெப்ஃசி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் எம்.செல்வராணி, மாவட்டத் தலைவா் எம்.எஸ்.அன்பழகன், செவிலியா்கள் மேம்பாட்டு சங்க மாவட்டச் செயலா் மு.அன்பரசன், சாலைப் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் பாலசுப்ரமணியன், மாவட்ட துணைத் தலைவா்கள் விஜயகுமாா், இளங்கோ ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மருத்துவ துறையில் தொகுப்பூதிய நியமனங்கள் கைவிட வேண்டும், அனைத்து தொகுப்பூதிய செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செவிலியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஆா்.சுபா உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக மாவட்டப் பொருளாளா் ஆா்.மணிமேகலை நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.