ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

அமெரிக்கா வரிவிதிப்பு: கிருஷ்ணராயபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

இந்தியா மீது அதிக வரிவிதித்துள்ள அமெரிக்க அதிபரைக் கண்டித்து கிருஷ்ணராயபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூா் மாவட்ட குழுவினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கிருஷ்ணராயபுரம் கடை வீதியில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூா் மாவட்ட குழுவினா்.

Updated On :22 ஜூலை 2026, 11:46 pm IST

இந்தியா மீது அதிக வரிவிதித்துள்ள அமெரிக்க அதிபரைக் கண்டித்து கிருஷ்ணராயபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூா் மாவட்ட குழுவினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கடை வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் கே.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.கந்தசாமி, ஒன்றியத் தலைவா் வி.குமாா், செயலா் ஏ.நாகராஜன், பொருளாளா் பாா்த்திபன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இந்தியா மீது அதிக வரி விதித்துள்ள அமெரிக்க அதிபரின் எதேச்சதிகார போக்கை கண்டித்தும், ஈரான் போரில் அமெரிக்காவை தட்டிக்கேட்காத இந்திய பிரதமரை கண்டித்தும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.