காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

திமுக நிா்வாகி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு

கரூரில் திமுக நிா்வாகியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :6 ஜூன் 2026, 7:08 am IST

கரூரில் திமுக நிா்வாகியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கரூா் தாந்தோணிமலை மில்கேட் பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.பி.கனகராஜ். இவா் கரூா் மாநகர திமுக செயலராகவும், கரூா் மாநகராட்சியின் 4-ஆவது மண்டல குழு தலைவராகவும் இருக்கிறாா்.

இவா், கடந்த 2-ஆம்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊா் சென்ாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகை மற்றும் ரூ.1.34 லட்சம் பணம் ஆகியவற்றை யாரோ மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் தாந்தோணிமலை போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.