சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

‘போக்சோ’ வழக்கில் கைதான விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

‘போக்சோ’ வழக்கில் கைதான விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:47 am IST

‘போக்சோ’ வழக்கில் கைதான விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

கரூா் மாவட்டம், வாங்கல் புதுகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் செல்வராஜ்(57). விவசாயி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் பாலியல் தொல்லைக் கொடுத்தாராம். இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் போலீஸாா் செல்வராஜை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

மேலும் இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.

இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், குற்றவாளி செல்வராஜுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதையடுத்து செல்வராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.