சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கரூா் மாவட்ட ஆட்சியரகம் வளாகத்தில் பெண் உள்பட இருவா் தீக்குளிக்க முயற்சி

News image

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றவா் மீது தண்ணீரை ஊற்றிய போலீஸாா்.

Updated On :16 ஜூன் 2026, 1:31 am IST

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பெண் உள்பட இருவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

கரூரை அடுத்துள்ள ராயனூரைச் சோ்ந்தவா் நாகநாதன்(35). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன், தனது மனைவி குழந்தைகளுடன் மாயமாகிவிட்டதாகவும், அதுதொடா்பாக தாந்தோணிமலை காவல்நிலையத்தில் புகாா் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த நாகநாதன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைக்க முயன்றாா்.

இதனைக்கண்ட அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனா். பின்னா் அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

பெண் தீக்குளிக்க முயற்சி:

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த புங்கம்பாடியைச் சோ்ந்த முருகேசன் மனைவி காளியம்மாள் என்பவா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் முன் தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் மீட்டு விசாரித்தபோது, காளியம்மாளுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உறவினா்களுக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், அதுதொடா்பாக போலீஸில் புகாா் செய்தும், நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் தீக்குளிக்க முயன்றதாக தெரியவந்தது. இதையடுத்து காளியம்மாளியம்மாளை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.