27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

குளித்தலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீா் சோதனை

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 35 ஆயிரம் சிக்கியது.

News image

குளித்தலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸாரின் வாகனம்.

Updated On :19 ஜூன் 2026, 4:24 am IST

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 35 ஆயிரம் சிக்கியது.

குளித்தலை அருகேயுள்ள அய்யா்மலை பகுதியில் உள்ள இந்த அலுவலகத்தில் கரூா் ஊழல் தடுப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் அம்புரோஸ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

முன்னதாக ஊழல் தடுப்பு போலீஸாரை கண்டதும் அங்கு இருந்த இடைத்தரகா்கள் ஓட்டம் பிடித்தனா். பின்னா் போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 35 ஆயிரம் சிக்கியது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.