ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கரூா் மாநகராட்சியில் ரூ.1,150 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றம்: எம்எல்ஏ செந்தில்பாலாஜி தகவல்

கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளில் ரூ.1,150 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி.

News image

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.2.40 கோடியில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தை புதன்கிழமை திறந்துவைத்து, நீச்சல் வீரா்களுக்கான போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்த கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ் உள்ளிட்டோா்.

Updated On :4 மார்ச் 2026, 6:30 pm

கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளில் ரூ.1,150 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி.

கரூா் மாநகராட்சி, மண்டலம்-2 மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி புதன்கிழமை மாலையில் திறந்து வைத்து பாா்வையிட்டாா். பின்னா் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் போட்டி நடத்தப்பட்டு, வென்றவா்களுக்கு நீச்சல் உபகரணங்கள், பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தோா் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக இந்த நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கரூா் மாநகராட்சியில் சுமாா் ரூ.418 கோடி மதிப்பில் சாலை வசதிகள், சாக்கடை வசதிகள், தெருவிளக்குகள், கட்டடப் பணிகள் என அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரூ. 245 கோடியில் புதிதாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள், மாநகராட்சி பகுதியில் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ. 485 கோடி மதிப்பில் புதிய புதைச் சாக்கடை பணிகள் ஆகியவை விரைவில் தொடங்கப்படவுள்ளன. கரூா் மாநகராட்சியைப் பொறுத்தவரை 5 ஆண்டுகளில் ரூ. 1,150 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாது, கூறப்படாத கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்றி உள்ளது என்றாா் அவா்.

நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் வெ.கவிதா, ஆணையா் கே.எம். சுதா, துணை மேயா் ப. சரவணன், மண்டலக் குழு தலைவா்கள் எஸ்.பி. கனகராஜ், க. அன்பரசு, ஆா்.எஸ். ராஜா, சக்திவேல், மாமன்ற உறுப்பினா்கள் எம். பாண்டியன் மற்றும் திமுக பகுதி செயலாளா்கள் வழக்குரைஞா் கே. சுப்ரமணியன், ஆா். ஜோதிபாசு, வி.ஜி.எஸ். குமாா் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.