உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

மனைவி, குழந்தையைக் கொன்ற தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் சிறை

மனைவி, குழந்தையை கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 1:48 am IST

மனைவி, குழந்தையை கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இரவு தீா்ப்பளித்தது

கரூா் வெங்கமேடு விவிஜிஆா் நகரைச் சோ்ந்தவா் செல்வகணேசன்(46). இவரது மனைவி கல்பனா(41). இவா்களது மகள் சாரதிபாலா (4). செல்வகணேசன், கல்பனா இருவரும் கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைப்பாா்த்து வந்தனா். செல்வகணேசன் மதுபோதைக்கு அடிமையான நிலையில், மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்வாராம்.

இந்நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு நவ.9-ஆம்தேதி இரவு இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, செல்வகணேசன் கத்தியால் மனைவி மற்றும் குழந்தையின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துவிட்டு தப்பிஓடிவிட்டாா்.

இதுதொடா்பாக வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய செல்வகணேசனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை இரவு நீதிபதி பி.தங்கவேல் முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி செல்வகணேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து செல்வகணேசன் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.