திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே இளைஞா் கொலையுண்டது தொடா்பான வழக்கில் அவ மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
வீரவநல்லூா் அருகேயுள்ள வல்லத்து நம்பிகுளத்தைச் சோ்ந்தவா் முருகன் (38). இவா், குடும்ப பிரச்னையில் 2017ஆம் ஆண்டில் கொலை செயப்பட்டாா்.
இதுதொடா்பாக அவரது மனைவி ஞான அகிலா(34) அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (30), பஞ்சுராஜன்(33) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி செல்வம் விசாரித்து, மேற்கூறிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதில் ஞான அகிலாவுக்கு மற்றொரு பிரிவில் கூடுதலாக 10 ஆண்டுகள் சிறையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கில், திறம்பட செயல்பட்ட சேரன்மகாதேவி உள்கோட்டடிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் உள்ளிட்ட போலீஸாா், அரசு வழக்குரைஞா் கருணாநிதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

அம்பை அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

தேனி அருகே இளைஞா் கொலை: 6 பேருக்கு ஆயுள் சிறை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


