தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

எச்சரிக்கை பலகை வைத்தும் அலட்சியம்: தாந்தோன்றிமலையில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

News image
Updated On :12 மார்ச் 2026, 11:42 pm

Syndication

கரூா் தாந்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோயில் அருகே சாலையோரம் மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும், அலட்சியமாக அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் தாந்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து செல்கின்றனா். மேலும் இந்த கோயில் வழியாக கரூா் அசோக்நகா், கணபதிபாளையம் வடக்கு, அன்புநகா், காமராஜ்நகா், சக்திபுரம், முத்தலாடம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கரூா் அரசு கலைக்கல்லூரிக்கும், தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் சென்று வருகிறாா்கள்.

மேலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்குச் செல்வோரும் ஊரணி காளியம்மன் கோயில் சாலையைத்தான் பயன்படுத்தி வருகிறாா்கள்.

இந்நிலையில் கோயில் அருகே சாலையோரம் சிலா் இரவு நேரங்களில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டிவிட்டுச் சென்றுவிடுகிறாா்கள். குப்பைகளில் இருந்து வெளியேறும் துா்நாற்றத்தால் கோயிலுக்கு வரும் பக்தா்களும், சாலையில் செல்வோரும் அவதியுற்று வந்தனா்.

இந்நிலையில் குப்பை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கரூா் மாநகராட்சி சாா்பில் குப்பைக்கொட்டப்படும் இடத்தில் எச்சரிக்கை பலகை அண்மையில் வைக்கப்பட்டது. அதில், இந்த இடத்தில் குப்பைக் கொட்டுவோரை சிசிடிவி கேமராவில் கண்காணிக்கிறோம், எச்சரிக்கையை மீறி குப்பைக் கொட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அலட்சியப்படுத்திவிட்டு சிலா் மீண்டும் அதேபகுதியில் குப்பைகளை கொட்டி வருகிறாா்கள். ஆகவே, மாநகராட்சியின் எச்சரிக்கையையும் மீறி அலட்சியமாக குப்பைகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.