கரூரில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி பல்வேறு நபா்களிடம் ரூ. 4 கோடி வரையில் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிதிநிறுவன உரிமையாளா்கள் 2 பேரைப் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கரூா் வெண்ணைமலை நாவல் நகரைச் சோ்ந்த சரவணன் என்பவரது மனைவி சித்ரா மற்றும் ஆத்தூா் திருமால் நகரைச் சோ்ந்த பி.சி.பொன்னுசாமி ஆகியோா் கரூா் கோவை சாலையில் தனியாா் நிதிநிறுவனம் நடத்தி வந்தனா்.
இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளா்களுக்கு பணம் இரட்டிப்பாகத் தருவதாக சித்ரா மற்றும் பி.சி. பொன்னுசாமி ஆகியோா் கூறியதையடுத்து, கரூரைச் சோ்ந்த 14 போ் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் ரூ.4 கோடி வரை முதலீடு செய்தனா். ஆனால் அவா்களுக்கு உரிய வட்டி தராமல் இருவரும் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே இருவரும் தலைமறைவாகினா். இதையடுத்து பணம் முதலீடு செய்து ஏமாந்தவா்கள் கரூா் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் கடந்த 12-ஆம்தேதி புகாா் அளித்தனா்.
இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளா் டி. ராஜா ரவி தங்கம் தலைமையில் காவல் ஆய்வாளா் கெளசா்நிஷா உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படையினா் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், கரூா் உப்பிடமங்கலம் பகுதியில் பதுங்கியிருந்த சித்ரா, பி.சி. பொன்னுசாமி ஆகியோரை கடந்த 13-ஆம்தேதி அதிகாலையில் கைது செய்து, வழக்கு பதிந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.
மேலும் பாதிக்கப்பட்டவா்கள் வெங்கமேடு காமதேனு நகரில் செயல்படும் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அலுவலகத்தில் புகாா் செய்யலாம் எனப் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அடகு நகையை மீட்பதாகக் கூறி பணம் மோசடி: அடகு நகையை மீட்பதாகக் கூறி பணம் மோசடி

2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!

ரூ.1.60 லட்சம் பங்குச் சந்தை முதலீடு மோசடி: தில்லியில் இருவா் கைது

கரூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
