பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியா் கைது

கடவூா் அருகே மதுபோதையில் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் ‘போக்சோ’ சட்டத்தில் கைது

News image
Updated On :17 மார்ச் 2026, 11:14 pm

Syndication

கடவூா் அருகே மதுபோதையில் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் ‘போக்சோ’ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், கடவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வரவணையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருப்பவா் முருகன் (53). இவா், வகுப்புநேரத்தில் மதுபோதையில் வந்து பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியா் முருகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமி வீட்டுக்குச் சென்று தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோா் மற்றும் கிராமமக்கள் ஆசிரியா் முருகன் மீதும், அவருக்கு உடந்தையாக உள்ள தலைமை ஆசிரியா் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தரகம்பட்டி-கரூா் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராஜூ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலா் மீனா, கடவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், சிந்தாமணிப்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளா் தங்கசாமி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் உரிய விசாரணை மேற்கொண்டு பள்ளி ஆசிரியா் முருகன் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியா் மீதும் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் ராஜூ உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோா்கள் மற்றும் கிராமமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னா், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் ஆசிரியா் முருகனை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இதையடுத்து அவரை கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தற்காலிக பணியிடை நீக்கம்: மேலும், இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் ராஜூவிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியா் மதுபோதையில் இருந்ததும், குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டதில் அவா் சில நேரங்களில் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதனால் அவா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம் என்றாா் அவா்.

Story image