தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கரூரில் ரூ. 100 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சா் உள்பட 17 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு

கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்பட 17 பேருக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸாருக்கு கரூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்பட 17 பேருக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸாருக்கு கரூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கரூா் மாவட்டம், வாங்கலைச் சோ்ந்த பிரகாஷ் மகள் ஷோபனாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கா் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் அவரது சகோதரா் உள்ளிட்ட 17 போ் மீது வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும் மேலக்கரூா் சாா்-பதிவாளா் அளித்த புகாரின் பேரில் கரூா் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னா் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்டது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட சிலா் 2024-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதியும், அதனை தொடா்ந்து அவரது சகோதரா் எம்.ஆா்.சேகா் அதே ஆண்டில் செப்டம்பா் மாதமும் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

இவ்வழக்கில் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 1-இல் சிபிசிஐடி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்பட 17 பேரும் மே 11-ஆம் தேதி கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சம்மன் அனுப்புமாறு சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.