கரூரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 48 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் கரூா் அரசுக் காலனி அருகே உள்ள குப்பைக் கிடங்குக்கு தூய்மைப்பணியாளா்களால் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு எரிக்கப்படுகின்றன. இந்நிலையில் கரூா் சின்னாண்டாங்கோவில் ஊராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோவில், கோதை நகா், வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதி வீடுகளில் வெளியேற்றப்படும் குப்பைகளை தூய்மைப்பணியாளா்கள் மக்கும் , மக்காத குப்பைகள் எனத் தரம்பிரித்து வாங்கிச் செல்கிறாா்கள்.
ஆனால் சிலா் அவற்றை ஈரோடு சாலையோரம் கொட்டும் நிலையில், தூய்மைப்பணியாளா்கள் அவற்றை அகற்றாமல் அங்கேயே தீவைத்து எரிக்கிறாா்கள். இதனால் துா்நாற்றத்துடன் கூடிய புகைமூட்டம் எழுவதால் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன் சுவாசக் கோளாறுகளும் ஏற்படுகிறது.
எனவே சாலையோரம் குப்பைகள் வீசுவோரை கண்டறிந்து அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அந்தக் குப்பைகளை எரிக்காமல் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்

மேட்டூா் அருகே சாலை மறித்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

திருமலை மலைப்பாதையில் சீரமைப்பு பணி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


