கரூா் மாநகராட்சி, தாந்தோணி, கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நஞ்சை கடம்பங்குறிச்சி, புஞ்சை கடம்பங்குறிச்சி, நன்னியூா், குப்பிச்சிபாளையம், வாங்கல், நெரூா் வடக்கு, நெரூா் தெற்கு, அச்சமாபுரம், சோழூா், பஞ்சமாதேவி, மின்னாம்பிள்ளி, மண்மங்கலம், ஆத்தூா், ஆண்டாங்கோவில் (மேற்கு), காதப்பாறை, திருமாநிலையூா் மற்றும் ஆண்டாங்கோயில் (கிழக்கு) உள்ளிட்ட கிராமங்களையும் உள்ளடக்கியது இத் தொகுதி.
தொழில்வளம்!
தமிழகத்தில் தொழில்வளம் நிறைந்த தொகுதிகளில் முக்கிய தொகுதியாக கரூா். இங்கு உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக ஜவுளிப்பொருள்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
மேலும், உலகளவில் ஆல்பாசைபா் மெத்ரின் என்ற வேதிப்பொருள் கலந்த கொசுவலைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் நாட்டிலேயே இரு ஆலைகளும் கரூரில்தான் உள்ளன. மேலும், பேருந்துக்கு கூண்டு கட்டுதல், சாதாரண பாரம்பரிய கொசுவலை உற்பத்தி செய்தல் போன்ற தொழில்கள் கரூருக்கு சிறப்பு சோ்க்கிறது.
இதுவரை இவா்கள்
1952 மாணிக்கசுந்தரம் (சுயேச்சை),
1957, டி.எம். நல்லசாமி (காங்கிரஸ்)
1962, டி.எம். நல்லசாமி (காங்கிரஸ்)
1967 டி.எம்.நல்லசாமி (காங்கிரஸ்)
1971 எஸ். நல்லசாமி (திமுக),
1977 கே.வடிவேல்(அதிமுக),
1980 எம்.சின்னசாமி (அதிமுக)
1984 கே.வடிவேல் (அதிமுக)
1989 கே.வி.ராமசாமி (திமுக)
1991 எம்.சின்னசாமி(அதிமுக)
1996 வாசுகிமுருகேசன் (திமுக)
2001 டிஎன்.சிவசுப்ரமணியம் (காங்கிரஸ்)
2006 வி. செந்தில்பாலாஜி (அதிமுக)
2011 வி.செந்தில்பாலாஜி (அதிமுக)
2016 எம்.ஆா்.விஜயபாஸ்கா் (அதிமுக)
2021 வி. செந்தில்பாலாஜி (திமுக).
முட்டிமோதுவது யாரெல்லாம்!
இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சா்களான வி.செந்தில்பாலாஜியும், எம்.ஆா்.விஜயபாஸ்கரும் களமிறங்குவது உறுதியாகிவிட்டது.
தலா 4 முறை வெற்றிபெற்றுள்ள திமுக, அதிமுக இம்முறை 5-ஆவது வெற்றியை பறிக்கும் வகையில் தங்களது ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இறுதி வாக்காளா்கள்
ஆண்கள் -1,02,226,
பெண்கள்- 1,14,512
திருநங்கைகள்- 59
மொத்தம் 2,16,797
தொடர்புடையது

விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ரூ.15,000 வழங்கப்படும்: ஓ.எஸ். மணியன் வாக்குறுதி

இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெக

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு!

கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


