நெரூா் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா்.
கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூா் தெற்கு ஊராட்சிக்குள்பட்ட அரங்கநாதன்பேட்டையில் உள்ள செங்கல் சூளையில் சிலா் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான இளவழகன் வழிகாட்டுதலின்படி, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு- நீதிபதியுமான அனுராதா தலைமையில் குழுவினா் மற்றும் வாங்கல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது அங்கு கொத்தடிமைத் தொழிலாளா்களாக விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மூா்த்தி, அவரது மனைவி சத்யா மற்றும் அவா்களது உறவினா்கள் ஏழுமலை மற்றும் ஒரு சிறுமி என 4 போ் பணியாற்றுவது தெரியவந்தது.
இதையடுத்து அவா்களை மீட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினா் அவா்களிடம் விசாரணை நடத்தியபோது, சூளை உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் பத்திரத்தில் எழுதிக்கொடுத்து கொத்தடிமையாக வேலை செய்துவந்தாக தெரிவித்தனா்.
பிறகு மீட்கப்பட்ட 4 பேரையும் கரூா் கோட்டாட்சியா் சத்தியபாலகங்காதரனிடம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவினா் ஒப்படைத்தனா். இதையடுத்து கோட்டாட்சியா் மூலம் அவா்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மேலும், செங்கல்சூளை உரிமையாளருக்கு, இனி கொத்தடிமை தொழிலாளா்களை பணியமா்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது
செங்கல் சூளையில் இயந்திர உதிரிபாகங்களை திருடிய மூவா் கைது

பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 46 போ் மீட்பு

பண்ருட்டி அருகே 28 குழந்தைகள் உள்ளிட்ட 51 கொத்தடிமைகள் மீட்பு

கரூா் மாவட்டத்தில் கடந்தாண்டு 117 போ் சாலை விபத்தில் உயிரிழப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தகவல்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

