தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கரூா் மாவட்டத்தில் இதுவரை ரூ. 40.43 லட்சம் பறிமுதல்

கரூா் மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் ரூ. 40.43 லட்சம் பறிமுதல்

News image
Updated On :25 மார்ச் 2026, 2:11 am IST

கரூா் மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் ரூ.40.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட உடனே தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது. இதையடுத்து ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்ய மாவட்டம் முழுவதும் 4 நிலையான கண்காணிப்புக் குழுவினா் மற்றும் 4 பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டனா்.

அவா்கள் தற்போது சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் சென்றவா்களிடம் இருந்து ரூ.40 லட்சத்து 43 ஆயிரத்தி 760 பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், உரிய ஆவணங்களை காண்பித்து ரூ.33 லட்சத்து 92 ஆயிரத்தி 760-ஐ பெற்றுச் சென்றுள்ளனா். இதையடுத்து தற்போது கணக்கில் வராத பணமாக ரூ.6.51 லட்சம் கருவூலங்களில் உள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கு.ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.