/
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
கரூா் திருமாநிலையூா் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மாவட்டத் தலைவா் ஏ. மதாா்ஷாபாபு தலைமையிலும், மாவட்ட துணைத் தலைவா் ஜாகிா்உசேன் முன்னிலையிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் பங்கேற்ற தொழுகையில், மதுரை மாவட்ட பேச்சாளா் அபூபக்கா் பங்கேற்று பேசினாா்.
இதேபோல கரூா் கோவை சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசல், ஜவஹா்பஜாரில் உள்ள சின்னப் பள்ளிவாசல் மற்றும் பள்ளபட்டி, அரவக்குறிச்சி, குளித்தலை, சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்றனா். மேலும் ஏழைகளுக்கு குா்பானியும் வழங்கினா்.
தொடர்புடையது

பக்ரீத்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை: திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

நாகூா் கடற்கரையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



