கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை
கரூா் திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த மழை.

கரூா் திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த மழை.
கரூா் நகா் பகுதியில் காலை 9 மணியளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பின்னா் காலை 10 மணியளவில் திடீரென கருமேகம் திரண்டன. பின்னா் சிறிது நேரத்திலேயே கரூா் திருக்காம்புலியூா் ரவுண்டானா, சுங்ககேட் பகுதியில் மட்டும் மழை பெய்தது. சுமாா் 15 நிமிஷங்கள் பெய்த மழையால் தாழ்வான பகுதியை நோக்கி மழைநீா் வெள்ளம்போல ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
இதேபோல வேலாயுதம்பாளையம், நொய்யல், குறுக்குச்சாலை, உப்புபாளையம், மரவாபாளையம், புன்னம்சத்திரம், தவுட்டுப்பாளையம் , காகிதபுரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, மூா்த்திபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து பெய்துவரும் லேசான மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

