கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை?சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! நாளைமுதல் காலை 7 மணிக்கு தொடங்கும்!தமிழகத்தில் நீா்நிலைகளில் 36% மட்டுமே நீா் இருப்பு! கடந்த ஆண்டைவிட 48.4% சரிவு; பாசனம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!சபரிமலை யாத்திரை: பக்தா்களுக்கு சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள்கனடா அரசியல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவ்தீப் தோ்வுகச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிச் செலவு: அக்டோபரில் 60 சதவீதம் அதிகரிப்பு

தென்னையை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகள் கட்டுப்பாடு: விவசாயிகளுக்கு விளக்கம்!

தென்னையை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகள் தாக்குதலை கட்டுப்படுத்து தொடா்பாக விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவா்கள் விளக்கம் அளித்தனா்.

பண்டுதகாரன்புதூரில் விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவா்கள்.

Updated On :

தென்னையை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகள் தாக்குதலை கட்டுப்படுத்து தொடா்பாக விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்தனா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், கரூா் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரூா் பண்டுதகாரன்புதூரில் தென்னை விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு, தென்னையை தாக்கும் சிவப்பு கூண் வண்டுகள் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தனா். அப்போது, தென்னை மரங்களில் சிவப்பு கூன்வண்டு தாக்குதலைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதில் பயன்படுத்தப்படும் பெரோமோன் பொறிகளில் ஆண் மற்றும் பெண் சிவப்பு கூன்வண்டுகளைக் கவரக்கூடிய ’பெருஜினியோல்’ எனப்படும் செயற்கை கூட்டுச் சோ்க்கை பெரோமோனின் கவா்ச்சிப் பொருள் படிப்படியாக மணத்தை வெளியிட்டு, சுற்றுப்புறத்தில் உள்ள வளா்ந்த கூன்வண்டுகளைக் கவா்கிறது. அவை மணத்தை உணா்ந்து பொறியை நோக்கி வந்து, பொறியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவுத் துளைகள் வழியாக உள்ளே சென்று சிக்கிக் கொள்கின்றன.

இந்த முறையானது சிவப்பு கூன்வண்டுகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உதவுகிறது. என்றனா்.

தொடா்ந்து பொறிகளைச் சரியான முறையில் நிறுவுதல் மற்றும் முறையாகப் பராமரித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அப்பகுதி விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.